வாரத்திற்கு 400 சிகரெட்டுகள் பாவிக்கும் 17 வயது சிறுமி… நுரையீரலில் ஏற்பட்ட துளை!!

35

பிரித்தானியாவை சேர்ந்த 17 வயது சிறுமி வாரத்திற்கு 400 சிகரெட்டுகள் பாவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்த 17 வயதாகும் கைலா பிளைத் என்ற சிறுமி வாரத்திற்கு சராசரியாக 400 இ-சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார்.

அதாவது 4000 பஃப்- களை அவர் உள்ளிழுத்துள்ளார். அதையடுத்து அவ் கடந்த மே மாதம் 11 ஆம் திகதியன்று கடும் வயிற்று வலியால் அவதியுற்று, மயங்கி விழுந்துள்ளார்.

உடனே அவர் வீட்டில் உள்ளவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். கைலாவை பரிசேதனை செய்த மருத்துவர்கள் அளவுக்கு அதிகமாக புகைப்பிடித்ததால் நுரையீரலில் துளை விழுந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நுரையீரலில் ஏற்பட்டுள்ள துளையானது மேலும் விரிவடையாமல் இருப்பதற்கு, ஐந்தரை மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நுரையீரலின் ஒரு பகுதியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.

சிகெரெட் புகைப்பதால் நுரையீரல் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, சிகெரெட் புகையை உள்ளிழுக்கும்போது நுரையீரலுக்குள் நச்சுத்தன்மை கொண்ட கேமிக்கல்களும், யுரேனியமும் படிமங்களாக சேகரமாகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleதன் வீட்டில் சடலமாக கிடந்த 32 வயது நடிகை… துர்நாற்றம் வீசியதால் தெரிந்த விடயம்!!
Next articleமயக்க ஊசி போட்டதால் உயிரிழந்த 7 வயது சிறுவன்.. அறுவை சிகிச்சையில் விபரீதம்!!