ஜிம்மிற்கு செல்லாமல் 10 மாதங்களில் 23 கிலோ எடையை குறைத்த தொழிலதிபர்!!

21

குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் ஜிம்மிற்கு செல்லாமலேயே 23 கிலோ எடையை குறைத்துள்ளார்.

இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபர் நிராஜ். இவர், 10 மாதங்களுக்கு முன்பு 92 கிலோ எடையுடன் இருந்துள்ளார்.

பின்னர், தனது எடையை குறைப்பதற்காக உடற்பயிற்சி ஆலோசகர் சதேஷ்கோஹெலை சந்தித்துள்ளார். அப்போது அவர் கொடுத்த உடற்பயிற்சி திட்டங்களை தொழிலதிபரால் பின்பற்ற முடியவில்லை.

இதையடுத்து, தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்று உடற்பயிற்சி ஆலோசகர் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், எங்கு சென்றாலும் காரில் செல்லும் நிராஜால் இந்த அறிவுரையையும் பின்பற்ற முடியவில்லை.

இதனால், நிராஜிற்கு வீட்டிலேயே உடற்பயிற்சி செய்வதற்கு சதேஷ் ஏற்பாடுகள் செய்து கொடுத்தார். மேலும், வீட்டில் சமைக்கின்ற உணவுகளுடன் பன்னீர், சோயா, பருப்பு ஆகிய சைவ புரத உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

அதன்படி, தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்டெப்ஸ்களை நடந்ததுடன் உணவையும் நிராஜ் பின்பற்றியுள்ளார்.

இதனால், 10 மாதங்களில் 23 கிலோ எடை நிராஜ் குறைந்ததாக உடற்பயிற்சி ஆலோசகர் சதேஷ் தெரிவித்துள்ளார்.

Previous articleகல்லூரி படிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாய் 25 வயது இளைஞருடன் காவல்நிலையத்தில் தஞ்சம்!!
Next articleஒன்றரை வயது குழந்தையின் மேல் விழுந்த டிவி.. கேரளாவில் சோக சம்பவம்!!