என் கணவர் என்மீது தீவைத்துவிட்டார் என கதறியபடி ஓடிவந்த இளம்பெண!!

60

இங்கிலாந்தில், உடல் முழுவதும் தீப்பற்றி எரியும் நிலையில், என்மீது என் கணவர் தீவைத்துவிட்டார் என சத்தமிட்டபடி ஓடிவந்த ஒரு அழகிய இளம்பெண்ணைக் குறித்த அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று வெளியானது நினைவிருக்கலாம். இந்நிலையில், அந்த செய்தி தொடர்பில் சில புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

என் கணவர்தான் இதைச் செய்தார் என சத்தமிட்டபடி ஓடிவந்த பெண்
இங்கிலாந்திலுள்ள Bury என்னுமிடத்தில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வாழ்ந்துவந்த சாரா (Sarah Hussein) என்னும் Nosheen Akhtar (31), 2021ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 24ஆம் திகதி, தீக்காயங்கள் காரணமாக மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அதற்கு முந்தைய தினம், உடலில் தீப்பற்றி எரியும் நிலையில், சத்தமிட்டபடி சாரா வீட்டை விட்டு வெளியே ஓடிவர, அருகிலுள்ள வீடு ஒன்றில் வாழ்ந்த Shamin Ahmed என்ற பெண், அவர் மீது பற்றிய தீயை அணைக்க முயலும்போது ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்க, அதற்கு சாரா, என் கணவரால்தான் இப்படிச் செய்தேன், அவர் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மருத்துவ உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்ணிடம் சாரா கூறிய தகவல்
ஆனால், சாராவைக் காப்பாற்ற முதலில் வந்தவரான மருத்துவ உதவிக் குழுவைச் சேர்ந்த Niamh Nolan என்ற பெண், சாராவிடம், உங்கள் உடல் முழுவதும் ஏன் பெட்ரோலாக இருக்கிறது என கேட்க, என் கணவர்தான் அதை வாங்கிவந்தார், அவர்தான் அதை ஊற்றினார், அவர்தான் அதைச் செய்தார் என்று கூறியுள்ளார்.

தொடரும் வழக்கு விசாரணை

சாரா பாகிஸ்தானில் வளர்ந்தவர் ஆவார். சாராவின் கணவரான மஹ்மூத் (Waqas Mahmood) ஏற்கனவே கயானி (Kierran Kayani) என்னும் பெண்ணைத் திருமணம் செய்து இருவரும் 10 ஆண்டுகள் இணைந்துவாழ்ந்துள்ளார்கள்.

பின்னர் இருவரும் விவாகரத்து செய்து பிரிய, தம்பதியரின் மூன்று பிள்ளைகளும் தந்தை மற்றும் தாய் வீட்டில் மாறி மாறி தங்கி வளர்ந்துவந்துள்ளார்கள்.

பிள்ளைகளைப் பார்ப்பதற்காக மஹ்மூத் அவ்வப்போது கயானி வீட்டுக்குச் செல்ல, மஹ்மூதின் இரண்டாவது மனைவியான சாரா, அவருக்கும் கயானிக்கும் தொடர்பு இருப்பதாக கணவரிடம் சண்டையிட்டுள்ளார்.

சாரா தீப்பற்றி எரிய வீட்டை விட்டு வெளியே வந்ததும், தன் முன்னாள் மனைவியை மொபைல் அழைத்த மஹ்மூத், அந்த சாரா தன் மீது தீயை வைத்துக்கொண்டாள் என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே அன்று மாலை தன்னைக் கொளுத்திக்கொள்ளப் போவதாக சாரா கூற, அவரது உறவினரான Ifra Farooq என்பவர் அவரது கையிலிருந்த லைட்டரைத் தட்டிப் பறித்திருக்கிறார். ஆகவே, சாராவே தன் மீது தீவைத்துக்கொண்டிருக்கவும் சாத்தியம் உள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக மஹ்மூத் மற்றும் இருவர் முதலில் கைது செய்யப்பட்டாலும், பின்னர் குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படாமல் அவர்கள் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். வழக்கு தொடர்கிறது.

 

Previous articleகாதல் மனைவியை துடிதுடிக்க கொன்ற கணவர்… நடந்தது என்ன? போலீசில் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!!
Next articleஇந்த கிழமைகளில் மட்டும் இளைஞரை கடிக்கும் பாம்புகள்…. 35 நாட்களில் 6 முறை கடித்துள்ளதாம்!!