நடிகர்களுக்கு அடுத்த வரிசையில், ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிடும் பக்தர்…!!!

39

குஷ்பு, ரஜினி உள்ளிட்டவர்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டிய நிலையில், பக்தர் ஒருவர் ஏலியனுக்கு கோயில் கட்டி கும்பிட்டு வருகிறார்.

ஏலியன் கோயில்

தமிழக மாவட்டமான சேலம், மல்லமூப்பம்பட்டியை அடுத்த ராமகவுண்டனூரைச் சேர்ந்தவர் லோகநாதன். இவர், வேற்றுகிரகவாசிகள் என்று கூறப்படும் ஏலியனுக்கு கோயில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார்.

இந்த கோயிலை ஏலியன் சித்தர், கைலாய சிவன் கோவில் என்று அழைக்கின்றனர். இந்த கோயிலுக்கு தினமும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கடந்த 2021 -ம் ஆண்டு முதல் இந்த ஏலியன் கோயில் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த கோயிலானது சித்தர் பாக்யா என்று அழைக்கப்படும் லோகநாதனின் குருநாதர் சித்தர் பாக்யா ஜீவசமமாதி அருகே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு, ஏலியன் சித்தர் மற்றும் அகத்திய முனிவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக லோகநாதன் கூறுகையில், “இதுவரை எந்த இடத்திலும் ஏலியன் சித்தர் இல்லை. தற்போது, கோயிலில் திருப்பணி பூஜை நடந்து வருகிறது.

இதனால், குறைந்த அளவு பூஜை செய்யப்படுகிறது. கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அனைத்து விதமான பூஜைகளும் செய்யப்படும்” என்றார்.

 

Previous articleதிருமணம் முடிந்த அன்று இரவே மணமகளுக்கு நேர்ந்த பயங்கரம்….!!!
Next articleமகள், மருமகன், பேத்தியை வயநாட்டிலேயே தகனம் செய்துவிட்டு, கனத்த இதயத்துடன் குன்னூர் வந்த தந்தை…!!!