பெண்களுக்கு ஆபத்தான உலகின் முதல் 5 நாடுகள்: இந்திய பெண்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி…..!!!

16

2024ம் ஆண்டில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பொதுவாக உலகின் சில நாடுகள் அதன் பாதுகாப்பு மற்றும் அமைதியான வாழ்வியல் சூழல்களுக்காக நன்கு அறியப்படுகின்றன.

அதே சமயம் மற்ற சில நாடுகள் பாதுகாப்பின்மை (குறிப்பாக பெண்களுக்கு எதிரான) ஆகியவற்றிற்காக அறியப்படுகின்றன.

இந்த நாடுகளில் வன்முறை, பாலியல் சமத்துவமின்மை, மோசமான சுகாதாரம், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாதுகாப்பிற்கான சட்டத்தின் பங்களிப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதில் முதல் 5 இடங்களில் உள்ள நாடுகள் எவை? இந்தியா இந்த தரவரிசையில் எந்த இடத்தில் உள்ளது என்பதை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

பெண்களுக்கு ஆபத்தான முதல் 5 நாடுகள்

தென் ஆப்பிரிக்கா

பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் ஒன்றாக தென் ஆப்பிரிக்கா தொடர்ச்சியாக முன்னிலை இடத்தில் இருந்து வருகிறது.

தென் ஆப்பிரிக்கா தீவிரமான பாலினம் தொடர்பான வன்முறைகளில் போராடி வருகிறது. இங்கு சாலை வன்முறை பாதுகாப்பு முக்கிய கவலைகளில் ஒன்றாக உள்ளது.

உலக மக்கள் தொகை மதிப்பாய்வின் படி, தென்னாப்பிரிக்காவில் 25% பெண்கள் மட்டுமே தெருக்களில் தனியாக சுதந்திரமாக நடப்பதை பாதுகாப்பாக உணர்கிறார்கள்.

நாடு முழுவதும் பாலியல் துன்புறுத்தல்கள், ஆள் கடத்தல் ஆகியவை பரவலாக காணப்படுகிறது.

பிரேசில்

பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் பிரேசில் இரண்டாவது நாடாக இடம் பிடித்துள்ளது.

28% பெண்கள் மட்டுமே பிரேசிலில் இரவு நேரத்தில் சாலையில் தனியாக சுதந்திரமாக நடப்பதை பாதுகாப்பாக உணர்கின்றனர்.

ரஷ்யா

ரஷ்யா பெண்களுக்கு எதிரான சர்வதேச படுகொலைகளின் 2வது உயர்ந்த விகிதத்தை கொண்டுள்ளது.

இதன் மூலம் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் 3வது இடத்தை ரஷ்யா பிடித்துள்ளது.

மெக்சிகோ

பெண்களுக்கு ஆபத்தான நாடுகளில் மெக்சிகோ நான்காவது நாடாக இடம் பிடித்துள்ளது.

33% பெண்கள் மட்டுமே மெக்சிகோவில் இரவு நேரத்தில் சாலையில் தனியாக சுதந்திரமாக நடப்பதை பாதுகாப்பாக உணர்கின்றனர்.

ஈரான்

ஈரான் பெண்களுக்கு ஆபத்தான நாடுகளின் தரவரிசையில் 5வது இடத்தை பிடித்துள்ளது.

இதற்கு ஆண் மற்றும் பெண்களுக்கு இடையே நிலவும் குறிப்பிடத்தக்க பாலின இடைவெளி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

பெண்களுக்கு ஆபத்தான 50 நாடுகளின் பட்டியலில் அதிர்ச்சி தரும் விதமாக இந்தியா 9வது இடத்தில் உள்ளது.

இந்தியா வளமான கலாச்சார பாரம்பரியம் மற்றும் பலதரப்பட்ட நில அமைப்புகளை கொண்டு இருந்தாலும், அதிகமான பாலியல் துஷ்பிரயோகங்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.

கட்டாயப்படுத்தப்பட்ட உழைப்பு மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றுடன் இந்தியா தொடர்ந்து போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

 

Previous articleவெறும் 500 ரூபாயில் திருமணத்தை முடித்த IAS தம்பதியினர் வைரலாகும் புகைப்படம்….!!!
Next articleஆடு மேய்த்துக் கொண்டே படித்து மருத்துவ கனவை நனவாக்கிய தமிழக அரசு பள்ளி மாணவர்கள்…!!