ஹாஸ்டல்ல என்ன டார்ச்சர் பண்றாங்க.. மெசேஜ் அனுப்பி விட்டு மாணவர் எடுத்த விபரீத முடிவு….!!

2

பீகார் மாநிலம் வைஷாலி நகரைச் சேர்ந்தவர் கவுதம். டெல்லியில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்தார்.

சம்பவத்தன்று, விடுதியில் படித்து வந்த அவர், தனது குடும்ப உறுப்பினர்களின் வாட்ஸ்அப் குழுவிற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

இதை பார்த்த உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் குறுஞ்செய்தியில், “அப்பாவும் அம்மாவும் என்னை மன்னியுங்கள்.

நான் நிரபராதி, என் மீது குற்றம் சாட்டுகிறார்கள். விடுதிக்காரர் என்னைத் துன்புறுத்துகிறார். தற்கொலை செய்து கொள்ள போகிறேன்,” என்றார்.

இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கவுதமை போனில் அழைக்க முயன்றனர். ஆனால் அவரது தொலைபேசி அழைப்பு ஏற்கப்படவில்லை.

இதனால் கௌதமின் பெற்றோர் நொய்டாவில் உள்ள உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கேட்டுள்ளனர்.

இதையடுத்து கவுதமின் உறவினர்கள் விடுதிக்கு சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதி செய்யப்பட்டது.

கௌதமின் பெற்றோர், தங்கள் மகனின் மரணத்திற்கு பல்கலைக்கழகம் தான் காரணம் என்றும், தங்கள் மகன் தவறு செய்திருந்தால், பெற்றோர்களிடம் எங்களிடம் தெரிவித்திருக்க வேண்டும்.

அதைச் செய்யாமல் விடுதி காப்பாளரால் எப்படி துன்புறுத்த முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர். இதனால் பல்கலைக்கழக விடுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Previous articleமனைவி, மகன்களுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை போலீசார் தீவிர விசாரணை….!!