வேறு பெண்ணுடன் உல்லாசம் கணவரின் வீடியோவை லீக் செய்து விட்டு மனைவி எடுத்த விபரீத முடிவு….!!!

49

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆந்திராஹள்ளியை சேர்ந்தவர் திலீப்… மானசா என்ற பெண்ணை காதலித்து வந்தார்.. மானசாவும் திலீப்பை அதிகமாக காதலித்தார். இருவரும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இப்போது மானசாவுக்கு 25 வயது.

தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் கடந்த சில வருடங்களாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. திலீப்புக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அந்த பெண்ணுடன் கடந்த ஒன்றரை வருடங்களாக திலீப் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கணவரின் தகாத உறவை அறிந்த மானசா, அது குறித்து திலீபிடம் விசாரித்தார்.

இருப்பினும் திலீப் தனது கள்ளக்காதலை கைவிடுவதாக இல்லை. இதனால் மானசாவுக்கும், திலீப்புக்கும் தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.. இந்நிலையில் நேற்று மாலை ஆந்திராஹள்ளியில் உள்ள கணவர் வீட்டிற்கு வந்த மானசா… அங்கு தனது கணவர் திலீப் வேறு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

தான் செய்த துரோகம், ஏமாற்று என்று ஓயாமல் புகார் செய்தார்.. இந்த லைவ் வீடியோவை பார்த்து திலீப் குடும்பத்தினர் உட்பட பலரும் அதிர்ச்சி அடைந்தனர்..இந்த வீடியோ வைரலாவதற்கு சற்று முன், மானசா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் ஆந்திராஹள்ளியே பரபரப்பில் உள்ளது.. இந்த தற்கொலை குறித்த தகவல் கிடைத்ததும் படரஹள்ளி போலீசார் விரைந்து வந்து மானசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, தங்கள் மகள் திலீப் மற்றும் அவரது குடும்பத்தினரால் தூக்கிலிடப்பட்டதாக மானசாவின் பெற்றோர் கதறி அழுதனர். காவல் நிலையம் முன்பு மானசா குடும்பத்தினர், திலீப்பின் உறவினர்களையும் தாக்கியதால், அப்பகுதியே போர்க்களமாக மாறியது.

இதையடுத்து படரஹள்ளி போலீசார் இவ்விவகாரத்தில் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து மானசா தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவக்கினர்.. இதில் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தால்தான் விசாரணை இன்னும் தீவிரமாகும் என்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமார்பு, அந்தரங்க உறுப்புகள் சிதைக்கப்பட்டு இளம்பெண் சடலமாக மீட்பு….!!!
Next articleமுற்றிய யூடியூப் சண்டை நேரலையில் தற்கொலை முயன்ற ‘பிரியாணி மேன்’ நடந்தது என்ன?