வெறிநாய் கடித்து 4 வயது சிறுவன் மரணம்…!!!

37

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெறிநாய் கடித்து, ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட 4 வயது சிறுவன், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் தெருநாய் கடித்து அடுத்தடுத்து உயிரிழப்புகளும், பாதிப்புகளும் ஏற்பட்டு வரும் நிலையில், நகராட்சி அதிகாரிகள், அரசு இந்த விஷயத்தில் அக்கறை எடுப்பதில்லை என்று பொதுமக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது.

நாய்க்கடி உரிமையாளருக்கு அபராதம் விதிப்பதால் மட்டுமே இந்த பிரச்சனையைத் தீர்க்க முடியாது என்றும், அபராதம் விதிப்பது மட்டுமே குற்றங்களைத் தடுத்து நிறுத்தாது என்று சமூக ஆர்வலர்களும் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெறிநாய் கடித்து நான்கு வயது சிறுவன் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். வெறிநாய்க்கடித்தன் காரணமாக சிறுவனின் மூளையில் காயம் நெருக்கமாக இருந்ததால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஜூலை 27ம் தேதி மாலை, 4 வயது சிறுவன் நிர்மல் தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த போது அந்த பகுதியில் இருந்த ​​தெருநாய் ஒன்று சிறுவனைக் கடித்து தாக்கியதில் சிறுவனின் வாயில் காயம் ஏற்பட்டது.

தெருநாய் கடித்து 17 நாட்களுக்குப் பிறகு, சிறுவன் சிகிச்சைப் பலனின்றி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார். இந்த ஆண்டு ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட முதல் வழக்காக இது பதிவாகியிருக்கிறது.

சம்பவம் நடந்த ஜூலை 27ம் தேதி, அந்த பகுதியில் இருந்த மக்கள் சிறுவனைக் கடித்த நாய் மீது கற்களை வீசியதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து தெருநாய் கொல்லப்பட்டது.

அரக்கோணம் தாலுகா காந்திபுரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பி.கலைவாணி மற்றும் பாலாஜி தம்பதியின் மகன் நிர்மல் (4). நிர்மலுக்கு ஜெனிதா என்ற சகோதரி இருந்தாள். ஜூலை 27ம் தேதி மாலை, நிர்மல் வெளியில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​தெருநாய் தாக்கியதில், வாயில் காயம் ஏற்பட்டது.

“நான் கொஞ்சம் தண்ணீர் எடுக்க வீட்டிற்குள் சென்றிருந்தேன். நான் திரும்பி வந்தபோது, ​​வாயில் காயங்களுடன் எனது மகனைப் பார்த்தேன். வாய் முழுவதும் அதிக ரத்தம் வெளியாகிக் கொண்டிருந்தது” என்று சிறுவனின் தந்தை பாலாஜி கூறியிருந்தார்.

உடனடியாக நிர்மலை காஞ்சிபுரத்தில் உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் சிறுவன் நிர்மலுக்கு நான்கு டோஸ் ரேபிஸ் தடுப்பூசி போட்டனர்.

மருத்துவர் பரிந்துரையின் பேரில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைக்காக நிர்மல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். செங்கல்பட்டில் அவருக்கு 15 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவரது உடல்நிலை சீரானதையடுத்து, நிர்மலை தங்கள் வீட்டிற்கு பெற்றோர் அழைத்து சென்றனர். ஆனால் விரைவில், நிர்மல் கத்துவது மற்றும் அழுவது போன்ற அறிகுறிகளைக் காட்டத் தொடங்கியது பெற்றோரைப் பதற்றத்திற்குள்ளாக்கியது.

மீண்டும், நிர்மல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், மருத்துவர்கள் ரேபிஸ் வைரஸ் சிறுவன் நிர்மலின் நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், இரண்டு நாட்களில் அவர் இறந்து விடக்கூடும் என்றும் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

“அதன் பின்னர் கவலைக்கிடமான நிர்மலின் உடலும் வீங்கத் தொடங்கியதில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். பெற்றோரின் வேண்டுகோளை ஏற்று, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அவர்களது கிராமத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இது குறித்து ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டி செந்தில் குமார் கூறுகையில், சிறுவன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால் தடுப்பூசியின் நான்கு டோஸ்களும் அவருக்கு வழங்கப்பட்டன.

காயம் மூளைக்கு அருகாமையில் இருப்பதால் மரணம் ஏற்படலாம். இது போன்ற சமயங்களில் மூளையை வேகமாக பாதிக்கிறது. நிர்மலை கடித்த நாய் 11 வயது சிறுவனையும் அவனது தந்தையையும் தாக்கியது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இருவரும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து தெருநாய்களை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

Previous article2 பெண்களுடன் கூத்தடித்த கணவனை கையும் களவுமாக பிடித்த மனைவி…!!!
Next articleகணவருடன் சேர்ந்து வாழ பள்ளி மாணவியை விருந்தாக்கிய மனைவி கேரளாவில் அதிர்ச்சி…!!!